மழை கவிதைகள் – Rain Kavithai in Tamil

Collection of Rain Quotes in Tamil, WhatsApp Rain Status, Mazhai Kavithai, Rainy quotes in Tamil, Rain Status in Tamil

Rain kavithai in tamil

  • Mazhai Kavithai in Tamil
  • Rain Quotes in Tamil
  • Mazhai Quotes in Tamil

குடை பிடித்து எதிர்தவர்களின்
பாதங்களையும் குளிர்வித்து
செல்கிறது மழை📋



மழையை ரசிப்பதாய்
நினைத்துக் கொள்கிறாய்
நீ உன்னை ரசிப்பதற்காகவே
உருகி வருகிறது மழை📋


நனைதலில் அல்ல
உணர்தலில் இருக்கிறது
மழை📋


எத்தனை முறை இறங்கி
வந்து தலையில் கொட்டு
வைத்து மழை பாடம்
எடுத்தும் பிடிவாதங்களை
இறக்கி வைக்க மறுத்தலைகிறோம்📋


முகம் கழுவியது மேகம்
சுத்தமாகியது பூமி📋


அடர்ந்த மரங்களிடை செல்லுங்கள்
கிளைகள் நெளித்தாலும்
இலைகள் சிலிர்த்தாலும்
மழை நின்ற பின்னும்
மழை நீரில் குளித்திடலாம்📋


வானம் வெட்டும் மின்னல்
தாளம் தட்டும் ஜன்னல்
இடிகள் இசைக்க
துளிகள் தெறிக்க📋


சிலுசிலுவென பொலிகின்றாய்
சிறு துளியாய் விழுகின்றாய்📋



மழையே நான்
நனைக்கிறேன்
உன் சாரலில்
துடிக்கிறேன்
உன் தூரலில்📋


சிறகில்லாமல் பறக்கிறேன்
கவலை இருந்தும் சிரிக்கிறேன்
உன்னை பார்த்ததால்📋


உன் வருகைக்கும் முன்னே
குளிர் காற்றை அனுப்பி
மண் மட்டுமல்ல விவசாயிகளின்
மனங்களையும் குளிர்
அடைய செய்தாயே📋


மழைத்துளி இசையால்
மனம் காகித கப்பல்
போல் மிதக்கும்மே
ஆயிரம் கவலைகள்
இருந்தாலும் உடனே
என்னை விட்டு
விலகி செல்லுமே📋


பூமிக்கு நீ தந்த
வருகையால் மலர்ந்தது
மலர்கள் மட்டுமல்ல
மக்கள் மற்றும்
விவசாயிகளின்
மனமும் தான்📋


உன் சின்ன தூறல்
இசைகேட்டு உன்
செல்ல மழையின்
குரல் கேட்டு உன்னில்
இன்று விழிக்கிறேன்📋


உருமி மேளம் இடி
முழங்கி வரவேற்ப்பை
தருகிறாய் வாசல் வந்து
வரவேற்றால் கண்டு
கொள்ளாமல் போகிறாய்📋


வண்ண வண்ண கலர்
பூசி வானவில்லாய்
ஒளிகிறாய் வையகத்திற்கும்
உயிர் தந்து உன்னை
நீயும் இழக்கிறாய்📋


மெல்ல மெல்ல கரைகிறேன்
உன் மழை பொழிவாள்
நீ செல்ல செல்ல
உறைகிறேன் நீ போனபின்
அடிக்கும் குளிர் காற்றால்📋


ஏன் வந்தாய்?
ஏன் சென்றாய்?
புரியவில்லை
உன் இன்ப சாரலில்
நனைகையில்📋


கார்மேக கூந்தல் கொண்டு
கட்டி அணைக்க நீ வந்தாய்
சற்று நிமிடம் ஆடிப்போனேன்
உந்தன் மழைத்துளி பட்டதும்📋


மழையில் நனைவது
அதைவிட அழகு
மழையின் இடையே
வெயில் பேரழகு📋


மழையில் குழந்தையின்
காகித கப்பல் அழகு
மழைக்குப்பின் மண்வாசனை
அற்புதமான அழகு📋


மழை இரவின் குளிர் அழகு
மொத்தத்தில் மழையே
ஒரு அற்புதமான அழகு📋


மழையே உன் வருகையால்
எண்ணற்ற மகிழ்ச்சிகள்
விவசாயின் மனதிற்குள்
பெருக்கெடுத்து ஓடுகிறது📋


கார்மேக தோட்டத்தில்
பூத்த கண்ணாடிப் பூவே
காற்றில் பறந்து என்
மீது விழுந்தாயோ📋


விண்ணில் தோன்றும்
முத்துக்களே மண்ணில்
விழுந்த வித்துக்கலே📋


கொட்டும் மழையை
நீ கொட்டும் அழகை
ரசிக்க ஒரு யுகம் போதுமா?📋


அகத்துக்கு மகிழ்ச்சியும்
புரத்துக்கு குளிர்ச்சியும்
தருவாய் நீ📋


காகிதக் கப்பல் விட்டு
மழையில் ஆடியதும்
கருப்பட்டி காப்பியை
கடும் மழையில் தேடியதும்
பல காலங்கள்
ஆனாலும் மறப்போமா?📋


மாதம் மும்மாரி மழை
பொழிந்த காலம் போச்சு
திரைப்படங்கள் கூட இன்று
மழை காட்சியை மறந்து போச்சு📋


உன்னை ரசிக்கத் தெரிந்த
என்னை உரசிப் பார்க்க
வந்தாயே தொட்டு சென்ற
நீ உன் குளிர்ச்சியை மட்டுமே
விட்டு சென்றது ஏனோ📋


குடை கொண்டு உன்னை
தடுக்க விரும்பாமல் கை
விரித்து தலை உயர்த்தி
உன்னை ரசிக்கிறேன்📋


நெருங்கி நீயும் வந்தால்
நெஞ்சமெல்லாம் பரவசமாய்
ஆகுதே உன்னிடமே
தஞ்சம் பெற்று சரிந்து
போனேன் உன் இதயத்தில்📋


மஞ்சள் நிற வெயில்
கூட உன்னை பார்த்து
மறைகிறது உன் மீது
உள்ள பயத்தால் தான்
சூரியனும் கரைகிறது📋


உச்சி முதல் பாதம்
வரை எனை உரசி
ரசிக்கிறாய் தூர நின்று
நான் பார்த்தால் ஊத
காற்றாய் பாய்ச்சுகிறாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *